Saturday, September 11, 2021

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்

Credit: Karthik Lakshman Ram, Counselling Psychologist.
http://thamizhvalaipoo.blogspot.com/2011/10/blog-post_11.html?m=1

திரைப்படங்களை இயக்கும் திரு. செல்வராகவன் அவர்கள் ஒரு பேட்டியில் உண்மையான காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

அனைவரும் காதலில் ஆரம்ப காலங்களில், ஒருவரை ஒருவர் கவர, பிறர் விரும்பும் வகையில் உள்ள நேர்மறை பண்புகளை மட்டுமே காண்பிப்பர்; காதல் கை கூடி, உறவு உறுதியடையும் நேரத்தில் பிறர் விரும்பா வண்ணம் இருக்கும் எதிர் மறை பண்புகளையும், உரிமையில் காண்பிக்கக்கூடும். அப்போதும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலால், அந்த எதிர்மறை குணங்களை சகித்து கொண்டு ஏற்றுக்கொள்வதே உண்மையான காதல்.

எத்தனை சத்தியமான வார்த்தை!!

Psychology Concepts:-

கார்ல் ரோஜர்ஸ் என்ற உளவியலாளர் மனிதனின் குண நலன்கள்/ஆளுமை மாறிக்கொண்டே இருக்கிறது, ஏனெனில் அவர்கள் மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தில் வாழ்கிறார்கள் ஆகவே ஒருவரின் குண நலன்கள் உலகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ மாறுவது இயல்பே!

கெஸ்டால்ட் தெரபி எனும் உளவியல் கோட்பாடு சொல்கிறது, மனிதர்கள் நல்லவர்களும் அல்லர்; கெட்டவர்களும் அல்லர். எத்தனை பெரிய நல்லவர்களும், சிலருக்கு கெட்டவர்கள் தான்; எத்தனை பெரிய கெட்டவர்களும், சிலருக்கு நல்லவர் தான். ஆகவே மனிதர்கள் அனைவரும் நேர்மறை குணங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் ஆகியவற்றின் கலவையே! முழுமையாக நேர்மறை குணங்கள் மட்டுமே கொண்டவரை இந்த உலகத்தில் எங்குமே காண முடியாது. அப்படி ஒரு மனிதரை தேடி அலைந்தால் வெறுப்பு தான் ஏற்படும். அப்படி ஒருவர் வேண்டுமென்றால் செய்து தான் கொண்டு வர வேண்டும். 

Credit: Karthik Lakshman Ram, Counselling Psychologist.
http://thamizhvalaipoo.blogspot.com/2011/10/blog-post_11.html?m=1

No comments:

Post a Comment